• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தக்காளி கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 2
கொத்துமல்லித்தழை (நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், அதில் பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அதன் பிறகு தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, பெருங்காயப் பொடியையும் போட்டு மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். கடைசியில் அத்துடன் கொத்துமல்லித் தழையையும் சேர்த்து ஒரு வினாடி வதக்கி, இறக்கி ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். (அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.)

12 கருத்துகள்:

Sounthari சொன்னது…

Going to try this out today !will post my feedback tomo

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அசத்தல் பதிவு

ராஜ நடராஜன் சொன்னது…

தலைப்பு காலையில் கண்ணில் பட்டது.திரும்ப தேடுவதற்குள் காணாமல் போய் விட்டது.இப்ப போலிஸ் மாதிரி லபக்ன்னு புடிச்சிட்டேன்:)

ராஜ நடராஜன் சொன்னது…

அட!அம்மணி செய்யும் தக்காளி சட்னி.கொத்துமல்லியும் கொஞ்சம் சேர்த்து அரைக்க சொல்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

சட்னி படம் இப்பவே இட்லிய வா!வான்னு கூப்பிடுது:)

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி ராஜ நடராஜன் அவர்களே.

Anisha Yunus சொன்னது…

கமலாம்மா,

நேற்று இதை இரவுக்கு செய்தேன். எனக்கு வெங்காயம் இல்லையென்றால் தலைவலிதான். என்ன செய்வது என்று.. :) பின் இதை ப்செய்ததும், இட்டிலிக்கு சாலப் பொருத்தம். நன்றி, பகிர்ந்தமைக்கு. :)

Jegan சொன்னது…

dear ms.kamala.. ur recipes are really good. its very useful for a bachelor like me. Thank u very much.

கமலா சொன்னது…

Thank you Jegan.

பெயரில்லா சொன்னது…

I am also Regular visitor for this site. All are really very nice and useful. Thank you very much!

KAVITARAJ சொன்னது…

Today tried தக்காளி கொத்துமல்லி சட்னி... Superb... Thanks dear LOTUS!!

KAVITARAJ சொன்னது…

Today tried, தக்காளி கொத்துமல்லி சட்னி... Superb with Dosai...
Thank U dear LOTUS!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...