- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
ஓட்ஸ் கோதுமை தோசை
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுத்து ஆற விடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஓட்ஸ் பொடியுடன், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை விட்டு தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவுடன் கலக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, காய்ந்தவுடன், சிறிது எண்ணை விட்டு தோசைக்கல்லை துடைத்து விட்டு, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட்டு, சிறிது எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி சிவக்க வேக விட்டு, திருப்பிப் போட்டு, மறு புறமும் வெந்த பின் எடுக்கவும்.
சாம்பார்/சட்னியுடன் பரிமாறவும்.
சுலபத்தில் செய்யக்கூடிய இந்த தோசை சுவையானது மட்டுமல்ல, சத்தானதும் கூட.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
Very nice and easy to cook :-)
கருத்துரையிடுக