- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
உருளைக்கிழங்கை, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுக்கவும். (மைக்ரோ அவனிலும் 3 முதல் 4 நிமிடங்கள் வரை வேக வைக்கலாம்).
மிளகு, சீரகம் இரண்டையும் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, அத்துடன் மிளகு, சீரகப் பொடி, உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு மொரமொரப்பாகும் வரை வறுத்தெடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றிங்க.
super
Thank you Honey.
வருகைக்கு மிக்க நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து அவர்களே.
வணக்கம், Microwaveovenல் உருளைகிழங்கை வேக விட தண்ணீர் அவசியமா? சும்மா தெளித்தால் போதுமா?
செந்தில்,
கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டால்தான் மிருதுவாக வேகும்.
கருத்துரையிடுக