• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ஓட்ஸ் சோள அடை


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் - 2 கப்
சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன் (கீழே உள்ள குறிப்பை கவனிக்கவும்)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

செய்முறை:

வெறும் வாணலியில் ஓட்ஸைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அத்துடன் சோள மாவு, மிளகாய் தூள், பெருங்காய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு சுமார் 6 உருண்டைகள் வரை வரும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, கல்லில் எண்ணை தடவி சூடாக்கவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சிறிது எண்ணையை அடையைச் சுற்றி ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு:


"சோள மாவு" என்று நான் குறிப்பிடிருப்பது, சூப், கிரேவி போன்றவற்றிற்குச் சேர்க்கும் "கார்ன் ஸ்டார்ச்" அல்ல. மஞ்சள் நிறத்தில் "கார்ன் மீல்" என்று கடைகளில் கிடைக்கும். இந்த மாவு இல்லையென்றால், சிறிது மக்கா சோளத்தை மிக்ஸியில் பொடித்தோ, அல்லது முழு சோளத்தை சற்று ஊற வைத்து அரைத்தோ சேர்க்கலாம்.

6 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

super adai.healthy recipe.

Geetha6 சொன்னது…

அருமை.வாழ்த்துகள் !

கமலா சொன்னது…

மிக்க நன்றி கீதா.

கமலா சொன்னது…

மிக்க நன்றி ஆசியா ஒமர்.

Jaypon , Canada சொன்னது…

wonderful recipes kamala . Very helpful Thanks .

Kamala சொன்னது…

Thank you Jaypon.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...