• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மிளகு சீரக மெதுவடை


தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம்.

அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழ அள்வு மாவை எடுத்து, இலேசாக தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 12 வடைகள் கிடைக்கும்.

4 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. சொன்னது…

வடை பாக்கும்போதே சாப்பிடனும்போல இருக்கே.

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி லஷ்மி.

பவள சங்கரி சொன்னது…

வடை சூப்பரா வந்திருக்குங்க.....

கமலா சொன்னது…

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
அவர்களே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...