• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சேமியா இட்லி


தேவையானப்பொருட்கள்:

சேமியா - 2 கப்
ரவா - 1 கப்
தயிர் - 3 கப்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
"ஈனோ" ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன்


தாளிக்க:

எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).

வறுத்த சேமியா-ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

மேற்கண்ட அளவிற்கு, சுமார் 15 இட்லி வரை கிடைக்கும்.

8 கருத்துகள்:

பூங்குழலி சொன்னது…

ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் இந்த ரெசிப்பியை ..நன்றி

Jayakumar Chandrasekaran சொன்னது…

rava iddliyil semiya pottal semiya iddli?

virutcham சொன்னது…

சேமியாவை சேர்த்தா வழ வழப்பு அல்லது stickiness இருக்காதா

கமலா சொன்னது…

சேமியாவை வறுத்து சேர்ப்பதால் அவ்வளவு வழவழப்பாக இருக்காது. மேலும் அதன் கொழகொழப்பு தன்மையே இட்லி உடையாமல் வர உதவும்.

கமலா சொன்னது…

உண்மை. ரவா இட்லி செய்முறைதான் இதற்கும். எதைப் போடுகிறோமோ அதன் பெயர்தானே இட்லிக்கு இருக்கும்.

கமலா சொன்னது…

பூங்குழலி,

வருகைக்கு மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

Kandumany Veluppillai Rudra சொன்னது…

சாப்பிடத்தான் தெரியும் எனக்குச் சமைக்கத் தெரியலையே.

அன்புடன் மலிக்கா சொன்னது…

நன்றாக இருக்கிறது சமையல்களின் அட்டகாசம்.. வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...