- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
ஓமப்பொடி
தேவையானப்பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஓமம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஓமத்தை வென்னீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஓமம் ஊறிய நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். ஊறிய ஓமத்தை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்து, எடுத்து வைதிருக்கும் ஓமத்தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் நெய்யை சற்று உருக்கி ஊற்றவும். அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். வடிகட்டி வைத்திருக்கும் ஓமத்தண்னீரை சிறிது சிறிதாக மாவில் விட்டு பிசையவும். தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து மாவை மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை விட்டு சூடாக்கவும்.
எண்ணை காய்ந்ததும், முறுக்குக் குழலில், ஓமப்பொடி அச்சைப் போட்டு சிறிது மாவை எடுத்து அதனுள் வைத்து, எண்ணையில் நேராக பிழிந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ஓமப்பொடி ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு, எடுக்கவும்.
கவனிக்க: எண்ணையை அடுப்பில் காய வைத்து விட்டு, மாவு பிசைய ஆரம்பித்தால், எண்ணை காய்ந்தவுடனேயே ஓமப்பொடியை பிழிய ஆரம்பிக்கலாம். மாவை பிசைந்து வெகு நேரம் வைத்திருந்தால், ஓமப்பொடி சிவக்க ஆரம்பித்து விடும். அதிக அளவில் ஓமப்பொடி செய்ய வேண்டுமென்றால், மாவை 4/5 பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை மட்டும் தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி பிழிந்து முடித்தவுடன், அடுத்த பகுதியை பிசைந்து பிழிய ஆரம்பிக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு, 6 முதல் 8 வரை பெரிய முறுக்குகள் (சுமார் ஒரு பெரிய கிண்ணம் அளவிற்கு) கிடைக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
கமலா மேடம்....
ஓமப்பொடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்நாக்ஸ் ஐட்டம்ல ஒண்ணு...
//அதிக அளவில் ஓமப்பொடி செய்ய வேண்டுமென்றால், மாவை 4/5 பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை மட்டும் தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி பிழிந்து முடித்தவுடன், அடுத்த பகுதியை பிசைந்து பிழிய ஆரம்பிக்கவும்.//
இந்த டிப்ஸ் சூப்பர்...
கருத்துரையிடுக