- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
வெள்ளரிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2
செய்முறை:
வெள்ளரிக்காயின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.(மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது).
பருப்பு வெந்தவுடன், அதில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு அத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் கடுகு, பொடியான நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
காரக்குழம்பு, வத்தல் குழம்பு போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
வாவ்வ்...சூப்பர் வெள்ளரிக்காய் கூட்டு.. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...
நீங்கள் சொன்னது போல், காரக்குழம்பு, வத்தல் குழம்பு தவிர துவையல் சாதத்துடனும் கலந்து சாப்பிட ஜோராக இருக்கும்...
சூப்பர் ரெசிப்பிக்கு நன்றி கமலா மேடம்..
நன்றி கோபி.
கருத்துரையிடுக