• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அடிப்படைக் கறி


அடிப்படைக் கறி எனப்படும் இந்த கிரேவியை செய்து வைத்துக் கொண்டால், இதை பயன்படுத்தி நிறைய கறி / கிரேவி வகைகளை தயாரிக்கலாம். உதாரணமாக, வேக வைத்தப் பருப்பைச் சேர்த்தால், சுவையான "பருப்பு" தயார். வேக வைத்த உருளைக்கிழங்கு, காய்கறிகள், பனீர், கீரை போன்றவற்றையும் சேர்த்து, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள விதவிதமான கிரேவி செய்யலாம். அல்லது இந்த கிரேவியை அப்படியேவும் சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்து பிசைந்து, தக்காளி சாதம் போன்றும் சாப்பிடலாம்.

தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1
தக்காளி (பெரிய சைஸ்) - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
இலவங்கம் - 2
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, இலவங்கம் ஆகியவற்றைப் போடவும். சீரகம் பொரிய ஆரம்பித்ததும் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும். பின்னர் தக்களி, உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிது (2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்) தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது நீரை விட்டுக் கிளறி விடவும். தக்காளி, வெங்காயம், மசாலா அனைத்தும் ஒன்றாகச் சேர்த்ததும், இறக்கி வைக்கவும்.

3 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

நல்லதொரு க்ரேவி சொன்னதற்கு நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டோம்.
என் மனைவி விரும்பி படித்தார்கள்.
தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

கமலா சொன்னது…

கோவை2தில்லி, திண்டுக்கல் தனபாலன் இருவரின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...