- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
வெண் பொங்கல்
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.
கத்திரிக்காய் கொஸ்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
வெண்பொங்கல் அருமை.
கத்திரிக்காய் கொஸ்துடன் சாப்பிட்டு விடுகிறேன்.
how to make palkova
how much water i have to add to make pongal
like this ven pongal never been tasted.
இந்த வகைப் பொங்கல் என்பது இலங்கையில் இல்லையெனலாம். பால் விடாததால் வெண்பொங்கல்
என்கிறீர்கள் என நினைக்கிறேன்.
இதை செய்து பார்க்க ஆவலுண்டு
கருத்துரையிடுக