• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கீரணிப்பழம்


கோடை நெருங்கி விட்டது. சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் "தர்பூசணி", "முலாம் பழம்" "கீரணிப் பழம்" என்று குவிந்து கிடக்கும் இந்த பழங்கள், கோடைக்கேற்ற, குளிர்ச்சியான பானங்கள் தயாரிக்க மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. "மெலன்" என்று பொதுவாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பழங்கள் வெவ்வேறு வகையான வடிவத்திலும், வண்ணத்திலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் "கீரணிப் பழம்". இது உடற்சூட்டைத் தணித்து, களைப்பைப் போக்க வல்லது. நெஞ்செரிச்சலை நீக்க உதவும். இதில் விட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆயுர்வேதத்தில், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுக் கோளாறு, குடற்புண் ஆகியவற்றை சரிசெய்ய, இந்தப் பழம் பரிந்துரைக்கப் படுகிறது.

இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத் தூவி அப்படியே சாப்பிடலாம்.

அல்லது வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு, தேவையான சர்க்கரையும், சிறிது தண்ணீரையும் சேர்த்து சாறாக்கி, குளிர வைத்துக் குடிக்கலாம்.

பாலைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, "மில்க் ஷேக்" செய்தும் குடிக்கலாம்.

இத்துடன் சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி சாறு, தேன் கலந்தும் சாப்பிடலாம்.

10 கருத்துகள்:

soundararajan selvam சொன்னது…

excellent not only for summer, all the day of the year, like to drink

ADHI VENKAT சொன்னது…

அருமையான பகிர்வு. தில்லியில் இந்த பழமும், தோலில் வரிகளுடன் கூடிய கிர்ணி பழமும் கிடைக்கும்.

கமலா சொன்னது…

சவுந்தர ராஜன் செல்வம், கோவை2தில்லி - இருவரின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

கமலா சொன்னது…

சவுந்தர ராஜன் செல்வம், கோவை2தில்லி - இருவரின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

கோமதி அரசு சொன்னது…

அருமையான வெயில் காலத்துக்கு ஏற்ற பானம், ஏற்ற பழம்.

அதன் மருத்துவ குணங்களும் அறிந்து கொண்டோம் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குளிர்ச்சியான பானம் ! நன்றி சகோதரி !

கமலா சொன்னது…

கோமதி அரசு, திண்டுக்கல் தனபாலன் - தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

Mouthwatering here, what a terrific and super tempting....
bangalorewithlove.com

பெயரில்லா சொன்னது…

கிர்ணிப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்குமா மலச்சிக்கலுக்கு ஏற்ற எல்லா காலங்களிலும் கிடைக்கும் பழம் எது என்று தயக்கூர்ந்து கூறவும்.

கமலா சொன்னது…

கீரணிப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்காது. மலச்சிக்கலுக்கு, வாழைப்பழம் சிறந்தது. எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. விலையும் மலிவானது. பப்பாளிப் பழமும் மலச்சிக்கலைத் தீர்க்க வல்லது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...