• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பேபி கார்ன் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

பேபி கார்ன் - 200 கிராம்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

4 அல்லது 5 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பேபி கார்னை முழுதாகப் போட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக விடவும். தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து சற்று ஆறியதும் நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய துண்டுகளை ஒரு தட்டில் போட்டு அதன் மேல் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு பிசறி விடவும்.  தேவையானால் சிறிது நீரைத் தெளித்து பிசறவும்.

ஒரு நான் ஸ்டிக் தாவாவை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய விடவும்.  அதில் பிசறி வைத்துள்ள பேபி கார்ன் துண்டுகளைத் தனித்தனியாக வைத்து, மிதமான சூட்டில் வேக விடவும்.  ஒரு பக்கம் சிவந்ததும், ஒவ்வொன்றையும் திருப்பிப் போட்டு சிவக்க வேக விடவும்.  இப்படியே திருப்பி, திருப்பி வேகவிட்டு, நன்கு சிவக்க வறுபட்டதும், எடுத்து வைக்கவும்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றாக இருக்கும் போலே... பேபி கார்ன் வாங்க வேண்டும்...

தேவன் மாயம் சொன்னது…

பார்க்கவே நன்றாக உள்ளது.

கமலா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், தேவன் மாயம் - வருகைக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது. பேபிகார்ன் கிடைக்கும் போது செய்து பார்க்க வேண்டும். எங்கள் ஊரில் எப்போவாவது தான் கிடைக்கும்.
நன்றி.

ADHI VENKAT சொன்னது…

பார்க்கவே பிரமாதமா இருக்குங்க.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...