தேவையானப்பொருட்கள்:
தயிர் - 1 கப்
வேர்க்கடலை (பொடித்தது) - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூண்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரை கப் வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு சிறு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். கடைசியில் தேங்காய்த்துருவலையும் அத்துடன் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
சிறு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.
கலந்த சாதம் மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
4 கருத்துகள்:
குறிப்பிற்கு நன்றி...
வீட்டில் செய்தால், தொண்டை கட்ற மாதிரி இருப்பது எதற்காக...?
புதுவிதமான வேர்க்கடலைதயிர் பச்சடி அருமை.
கோமதி அரசு - வருகைக்கு மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் -
தயிர் மிகவும் புளித்ததாக இருந்தால் தொண்டைக் கட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. அதிகம் புளிக்காத கெட்டித்தயிரைக் கடைந்து பச்சடி செய்ய வேண்டும். மேலும் பச்சடியை செயத பின்னர் நீண்ட நேரம் வைத்திருந்தாலும் பச்சடி புளித்து விடும். பச்சடியை செய்தவுடன் சாப்பிட்ட வேண்டும். சிலர் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்திருந்து சாப்பிடுவார்கள். அதனாலும் தொண்டைக் கட்டிக் கொள்ளலாம்.
[url=http://remontveka.ru/remont-kvartir-v-moskve.html]]
[img]http://remontveka.ru/images/remont-kvartir-v-moskve.jpg[/img]
[img]http://remontveka.ru/images/remont-kvartir-v-moskve-2.jpg[/img]
[/url]
Tegs: ремонт квартиры москва демонтаж [b]отделка офисов[/b].
[u]ремонт квартир дешево москва [/u]
[i]ремонт квартир объявления москва [/i]
[b]правила ремонта квартир в москве [/b]
[url=http://remontveka.ru/remont-kvartir-v-moskve.html]ремонт квартир в москве прайс [/url]
கருத்துரையிடுக