தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பச்சை கொத்துமல்லி இலை - ஒரு சிறு கட்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரை விட்டு, அரை வேக்காடாக வேக வைத்தெடுக்கவும். குக்கரில் போட்டு 1 அல்லது 2 விசில் வரை வேக வைத்தும் எடுக்கலாம்.
கொத்துமல்லை இலையை நன்றாக அலசி விட்டு, நறுக்கிக் கொள்ளவும் ஒரு கப் நறுக்கிய கொத்துமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு சூடானதும் அதில் சீரகத்தை போடவும். சீரகம் பொரிய ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் கொத்துமல்லி விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருளைக்கிழங்கும், கொத்துமல்லி விழுதும் நன்றாகக் கலக்கும் வரை வதக்கி அடுக்கவும்.
சாதம் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
4 கருத்துகள்:
சூப்பர்...
well done.
எச்சில் ஊருது
ஆஹா... எனக்கு எச்சில் ஊருது
கருத்துரையிடுக