• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கும்மாயம்


"கும்மாயம்" அல்லது  "ஆடி கும்மாயம்" என்று அழைக்கப்படும் இந்த பலகாரம், வெவ்வேறு வகை பருப்பு மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பாகும்.  இதை ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாயன்று செய்து கடவுளுக்கு பிரசாதமாகப் படைப்பார்கள்.

தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 6 கப்

செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.  சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.  மேற்கண்ட அளவிற்கு 2 கப் மாவு கிடைக்கும்.  இதை "கும்மாயப் பொடி" அல்லது "கும்மாய மாவு" என்று சொல்வார்கள்.

ஒரு வாணலியில் பாதி அளவு நெய்யை விட்டு, அதில் கும்மாயப் பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.  இன்னொரு அடுப்பில் வெல்லத்தையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.  வெல்லம் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

வறுத்த மாவில், வெல்ல நீரை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும்.  மாவு கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, இறக்கி, நெய் தடவிய ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும். 

அப்படியேவும் பரிமாறலாம்.  அல்லது துண்டுகளாகியும் கொடுக்கலாம்.

3 கருத்துகள்:

சென்னை பித்தன் சொன்னது…

படத்தைப் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறதே

கோமதி அரசு சொன்னது…

ஆடி தபசு, சித்திரை மாதம் எல்லாம் எங்கள் பக்கம் கும்மாயம் செய்வார்கள். அந்த குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி.
செய்முறை குறிப்பு, படம் எல்லாம் அருமை.

சாரதா சமையல் சொன்னது…

நல்ல ரெசிப்பி . வாழ்த்துக்கள் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...