• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பச்சை பயறு அடை


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

பச்சை பயறை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் க்ழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு, வடிகட்டியில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பயறை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.  1 அல்லது 2 சுற்றுகள் சுற்றினால் போதும்.

அரைத்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.  தேவையானால் சிறிது நீரைத் தெளித்து, சப்பாத்திக்கு பிசைவது போல் மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.  சிறிது எண்ணையை மாவின் மேல் தடவி 30 முதல் 45  நிமிடங்கள் வரை மூடி வைத்து ஊற விடவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் சிறிது எண்ணையை விட்டு தேய்த்து விடவும்.  ஒரு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லின் மேல் வைத்து, விரல்களால் மெல்லிய அடையாகத் தட்டவும்.  (கல்லில் தட்ட சிரமமாக இருந்தால், ஒரு வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலோ தட்டி எடுத்து கல்லில் போடவும்). அடையை சுற்றி சிறிது எண்ணையை விட்டு, இரு புறமும் திருப்பி திருப்பிப் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.  அடையை கல்லில் போட்ட பின், ஒரு பெரிய ஸ்பூனின் பின் புறத்தால் அடையை எல்லா இடத்திலும் சற்று அழுத்தி விட்டால், அடை மெல்லியதாக பரவிக் கொள்ளும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விட்டால் அடை நன்றாக சிவந்து விடும்.

இதை தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.

4 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

வித்தியாசமாகவும், பார்க்கவே சூப்பராகவும் உள்ளது. செய்து பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றே செய்து பார்த்து விடுவதாக வீட்டில் சொல்லி உள்ளார்கள்... நன்றி...

Kamala சொன்னது…

ஆதி வெங்கட், திண்டுக்கல் தனபாலன் - நன்றி. செய்து பார்த்து கருத்துகளை தெரிவிக்கவும்.

அன்புடன்
கமலா

JAYARAJ MATHS TEACHER சொன்னது…

அனைத்தும் எளிமை மற்றும் இனிமை நன்றி சகோதரி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...