• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பீட்ரூட் பொரியல்


தேவையானப் பொருட்கள்:

பீட்ரூட் - 2
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
பொரியல் பொடி - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

பீட்ரூட்டை நன்குக் கழுவி, தோல் சீவி, சிறியத் துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு, மிளகாயைக் கிள்ளிப் போடவும். உளுத்தம்பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கறிவெப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், பீட்ரூட்டைச் சேர்த்து கிளறி மூடி வைத்து நிதானமான தீயில் வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அடிக்கொரு தரம் கிளறி விட்டால் போதும். தேவைப்பட்டால், ஒரு கை நீரைத் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்தவுடன், சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். அத்துடன் பொரியல் பொடி, உப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். பின் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும்.


குறிப்பு:

இதில் சோம்பு சேர்ப்பதால், மசாலா வாசனையுடன் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...