• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பொரி உப்புமா


தேவையானப் பொருட்கள்:

பொரி - 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் - 1

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

அலங்கரிக்க:

காரட் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பொட்டுக்கடலையைப் பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்து, எல்லாம் லேசாக சிவந்தவுடன், வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியவுடன், பச்சைமிளகாய் விழுதைப் போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். பின் அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும். பின் அதில் ஊறவைத்தப்பொரி, பொட்டுக்கடலைப்பொடி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி காரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...