• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைப்பூ வடை


தேவையானப்பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்தமிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாஉ - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை, இர்ண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இங்கே குறிப்பிட்டுள்ளப்படிவாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க் விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள் பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்தமிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வழித்தெடுக்கும் முன்னர், வெந்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

வாழ்க்கையில் முதல்முதலா நேத்து ஒரு வாழைப்பூ வாங்கினேன்.

இன்னிக்கு வடை செய்ய உத்தேசம்.

செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்:-)

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி துளசி கோபால் அவர்களே.

சில வாழைப்பூ கசப்பு தன்மையோடு இருக்கும். சிறிது பூவை எடுத்து சுவைத்துப் பார்த்து விட்டு உபயோகிக்கவும்.

Nirmala சொன்னது…

படைப்பிற்கு நன்றி. மிகவும் சுவையாக இருந்தது.ஆனால் நான் வாழைப்பூவை அரைக்கவில்லை மாறாக அப்படியே சேர்த்து விட்டேன்.

Nirmala சொன்னது…

படைப்பிற்கு நன்றி. மிகவும் சுவையாக இருந்தது.ஆனால் நான் வாழைப்பூவை அரைக்கவில்லை மாறாக அப்படியே சேர்த்து விட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...