- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
வாழைப்பூ பொரியல்
தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ - 1
சாம்பார்பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
.இங்கே குறிப்பிட்டுள்ளப்படி வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க் விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
அத்துடன், சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர், பிசறி வைத்துள்ள வாழைப்பூவைப் போட்டு நன்றாக வத்க்கவும். மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக