• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைப்பூ


வாழைப்பூ மருத்துவக் குணங்கள் நிறைந்தது. இதற்கு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வல்லமை உண்டு. பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வல்லது. இரத்த விருத்திக்கும் உதவக்கூடியது.

இதை சமையலுக்கு ஏற்றவாறு நறுக்கி எடுப்பது, சற்று சிரமமான வேலைதான். ஆனால், பழகிக் கொண்டால், இலகுவாகவே இதைச் செய்து முடிக்கலாம்.

வாழைப்பூ, பல மடல்களைக் கொண்டது. ஒவ்வொரு மடலுக்கு அடியிலும், கொத்துக் கொத்தாக, பூக்கள் இருக்கும். இந்தப் பூக்களின் நடுவே, ஒரு சிறிய நரம்பு போன்ற தண்டும், அதன் அடியில் பிளாஸ்டிக் போன்று ஒரு சிறிய வெள்ளைத் தோலும் இருக்கும். இது இரண்டையும் நீக்கி விட்டு, பூக்களை மட்டும், பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய பூவை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். தண்ணீரில், சிறிது மோர் சேர்த்தால், பூவின் நிறம் மாறாமல் இருக்கும்.


மேல் பாகத்தில் இருக்கும் பூக்கள், சற்று பெரிதாக, நரம்பு மற்றும் தோலை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.


உட்புறத்தில் இருக்கும் பூக்கள், சிறிதாகவும், மூடியும் இருக்கும். ஒரு கொத்து சிறியப்பூக்களின் அடிபாகத்தை, ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு உள்ளங்கையில், பூக்களின் மேல் பாகத்தை இலேசாக தேய்த்தால், பூக்கள் விரிந்து, உள்ளே இருக்கும் நரம்பு தெரியும். அந்த நரம்பை நீக்கும் பொழுது, அதன் அடியில் இருக்கும் வெள்ளைத்தோலும் வந்து விடும். வாழைப்பூ மடல் கருஞ்சிவப்பு நிறத்தில் தொடங்கி, உரிக்க உரிக்க வெளிர் நிறத்தில் முடியும். கடைசியில் இருக்கும் பூவும், அதன் பின் இருக்கும் மொட்டு போன்ற பகுதியும், இளசாக இருக்கும். இதனை அப்படியே உபயோகிக்கலாம்.

தமிழ்நாட்டு காய்கறி கடைகளில், வாழைப்பூ விற்கப் படுகிறது. வெளி நாட்டில் இது கிடைக்குமா என்று தெரியவில்லை.

தங்களுக்கு நேரமும், கடையில் வாழைப்பூவும் கிடைத்தால், தவறாது இதைச் சமைத்துப் பாருங்கள்.

வாழைப்பூ வடை, வாழைப்பூ பொரியல்

3 கருத்துகள்:

Parimalam Kannan சொன்னது…

Hai Kamala Mam,

U r doing a great job....

I just want to share my experience with u about valaipoo, which was prepared from a full flower with petals.

I basically was preparing as u have mentioned and one of my neighbour told to cut the whole flower for all preparations(including the big petal)and only by removing the unwanted things when it does not cut with knife (so dont need to take those small unwanted things from each and every flower). Later, she gave me her preparation of valaipoo poriyal to taste and it was good too.. (but I was little afraid of stomach pain because of the hard rubber-like things, which we usually will remove for poriyal, were present in that).

My hubby, who does not like valaipoo, liked a lot telling it tasted good. So I started to cut the whole flower for all dishes. It takes 10 or 15 minutes to cut in knife. Also we get more quantity as we add petals too... Compared to the small flowers inside petals too have more fiber.

Just give a try...

Parimalam Kannan சொன்னது…

Hai,

Method which she taught me to cut:

As we usually do, remove 3 or 4 big petals(dont use these petals) and cut only the bunch of flowers by removing unwanted things.

Once done, the size of the flower will be 3/4. Now cut the top tip for 1 inch length to make a flat surface. Then, with a knife just beat up the flat surface with the sharp edge to make 1/2 cm depth horizontally and vertically. Now, cut the 1/2 cm to get fine particles of the petal.

As we repeat this, at some point we get the bunch of flowers with the rubber-like things to cut. While cutting such things we can just take out the unwanted things if it does not cut. Otherwise, it can be used for cooking as the small flowers are very tender and easily digestable.

Now a days, I prepare in this manner and free from concerns related to indigestion issues. According to me, when compared to hard substances like mutton and chicken (mostly we used to have) these rubber-like things are easily digestable even added or can be thrown while eating like drumstick.

Preparation: Chop 20-25 small onions with 3 or 4 green chilles coarsely(dont cut or grind). Fry mustard, curry leaves, and add small onions till golden brown and add valaipoo with salt with little water. Allow to cook in low flame for 10-15 mins. Finally mix coconut oil 2 tsp or scrapped coconut and serve.

Big happiness here is we get more in quantity and time saving healthy dish...

Try it and publish if u wish....

Thanks

Parimalam Kannan from Coimbatore

Shalini Rayapparaj சொன்னது…

Hai Parimalam

I had read your receipe given below basically i do this valaipoo same manner which you have told below, i that i give small hint that to take the part of rubber like things " after cutting the flower take some coconut oil / other in your hand apply both side of hand and mash the flower pieces their u find the rubber like things in your hand do continuous then your flower become soft and like puttu then you can make poriyal or vadai , Usually we say that poriyal as Thoran

Try it and Enjoy

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...