• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயைப் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறி விடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தப்பின், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெல்லிக்காயில் சர்க்கரைப் பாகு நன்றாக ஒட்டும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாகு சற்று நிறம் மாறி காயுடன் நன்றாகக் கலந்தப் பின் கீழே இறக்கி வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.

8 கருத்துகள்:

பூங்குழலி சொன்னது…

microwave cooks the gooseberries faster

பெயரில்லா சொன்னது…

தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி பூங்குழலி.

goma சொன்னது…

கமலா
உங்கள் அடுப்பங்கரைக்குள் இன்று ஒரு திடீர் விசிட் அடித்தேன் .அப்படியே மலைத்துப் போனேன்.
இனிப்பௌ நெல்லிக்காயைப் பார்த்த உடனே ஒரே ஜொள்ளுதான்
சீக்கிரமே என் சாப்பாட்டு மேஜையில் இனிப்பு நெல்லிக்கனி வீற்றிருக்கும்
நன்றி

பெயரில்லா சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

very nice for your amla pickle, thank u very much

Unknown சொன்னது…

சுக்குப்பொடி மற்றும் உப்பு எப்போது போடவேண்டும் என்று குறிப்பில் இல்லை. கொதிக்கும்போது போடவேண்டும் என்று நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

சுக்கு மற்றும் உப்பு எப்போது போட வேண்டும் குறிப்பில் இல்லையே. கலவைக்(நெல்லி+சர்க்கரை) கொதிக்கும்போது போட வேண்டும் என்று யூகம். சரியா?

கமலா சொன்னது…

தங்கள் யூகம் சரி. விட்டு போனதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இப்பொழுது பதிவில் சேர்த்து விட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...