• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மெது பக்கோடா


தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன் அல்லது
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணை அல்லது
வனஸ்பதி - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணை அல்லது வனஸ்பதியைப் போட்டு அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது சமையல் சோடாவைச் சேர்த்து, நுரைத்து வரும் வரை விரல்களால் நன்றாகத் தேய்த்து விடவும். பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி விடவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். கடைசியில் வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவின் ஒரு பகுதியில் சிறிது நீரைத் தெளித்து இளகலாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில், சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும். எல்லா மாவையும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து செய்யவும். அப்படி செய்வதால், மாவு புளித்து போகாமல், பக்கோடா அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.

தேங்காய்ச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

very nice

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...