• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பச்சை பயறு மிளகு மசாலா


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சைப்பயறை 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு நல்லத்தண்ணீர் 2 கப் விட்டு 1 அல்லது 2 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையான மசாலா இது. குழாய்ப்புட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

4 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

பச்சை பயிறு சுண்டல் தவிர வேற எதுவும் ட்ரை பண்ணதில்லை...

பச்சைப்பயிறு மிளகு மசாலா சப்பாத்தி, குழாய்ப்புட்டு ரெண்டு டிஷஸ்க்கு மட்டும் தான் தொட்டுக்க முடியுமா?

கமலா சொன்னது…

கோபி,

வருகைக்கு நன்றி. சப்பாத்தி, புட்டு மட்டுமன்றி, சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பிரட் டோஸ்ட்டுடனும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்.

SubhasriSriram Bahrain சொன்னது…

வணக்கம் கமலா அவர்களே. நீங்கள் படத்துடன் கூடிய அனைத்து சமையல் குறிப்புகளும், மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மிக்க நன்றி.

கமலா சொன்னது…

SubhasriSriram,

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...