• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அச்சு முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும்.  எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து  எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும்.  அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.  உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.

இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.

3 கருத்துகள்:

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கோமதி அரசு சொன்னது…

முட்டை கலக்காமல் செய்து இருப்பது மகிழ்ச்சி.

சிலர் முட்டை கலந்து செய்வார்கள். ஒரு முறை செய்து இருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்தவுடன் செய்ய ஆசை.

கமலா சொன்னது…

உண்மை. சிலர் முட்டை கலந்துதான் செய்வார்கள். ஆனால் எங்கள் வீட்டருகில் இருக்கும் குடும்பத்தினர், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது, அக்கம் பக்கத்திலுள்ளோர் அனைவருக்கும் (சிலர் முட்டை சாப்பிட மாட்டார்கள் என்பதால்) கொடுப்பதற்காக, அவர் செய்யும் முறுக்கு, கலகலா ஆகியவற்றில் முட்டை கலக்காமல்தான் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...