• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சோளம் கீரைத்துவட்டல்


தேவையானப் பொருட்கள்:

சோளம் - 1 கப் (வேக வைத்தது)
கீரைக்கட்டு - 1 நடுத்தர அளவு (எந்தக் கீரையையும் உபயோகப்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி ‍- 1
பூண்டு -‍ 5 அல்லது 6 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2

செய்முறை:

கீரையை நன்கு ஆய்ந்து அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் பூண்டு சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், வெங்காயத்தைச் சேர்த்து ஓரிரு நிமிட‌ங்கள் வதக்கி, பின்ன‌ர் தக்காளியைச் சேர்க்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்புப் போட்டு சிறிது வதக்கவும். வேகவைத்த சோளம், கீரை ஆகியவற்றைப் போட்டு ஒரு கை நீர்த்தெளித்து மூடி வேகவிடவும்.

நீர் சுண்டி கீரை வெந்ததும், இறக்கி வைக்கவும்.

3 கருத்துகள்:

vennilavu சொன்னது…

thank u kamala madam...
I badly need an recipe by "Cholam" ( jowar ) preferably an snack item with less oil... or any of your choice... will be happy and helpful if u provide one..

u can also mail it to the id vijayr.ero@gmail.com

Kamala சொன்னது…

Thank you for visiting my site. Please check here for Corn Sundal recipe. http://www.kamalascorner.com/2008/09/corn-sundal.html

Will post the recipe in Tamil shortly.

vennilavu சொன்னது…

thanks for ur immediate reply...
Actually i wanna know a dish by Cholam ( that is of very small balls nd white in colour ) not the one of " Makkaa cholam"...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...