• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தேங்காய் சாதம்


தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

குறிப்பு: இதில் வேர்க்கடலை, சிறிது இஞ்சி ஆகியவற்றையும் சேர்க்கலாம். தாளிப்பதற்கு, எந்த எண்ணையையும் உபயோகப்படுத்தலாம். ஆனால், தேங்காய் எண்ணையில் தாளித்தால்தான் உரிய சுவை கிடைக்கும்.

4 கருத்துகள்:

Anisha Yunus சொன்னது…

கமலாக்கா,
இன்று இந்த தேங்காய் சாதத்தை செய்தேன். ரொம்ப அருமையாக வந்தது. அம்மா நினைவு வந்துவிட்டது :( அம்மா செய்தது போலவே வந்தது. மதிய சாப்பாட்டுக்காக செய்தும், மணமும் சுவையும் இதை என் காலை உணவாக்கி விட்டது. மீண்டும், நன்றி. :)

கமலா சொன்னது…

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி அன்னு. என்னையும் அம்மா என்றே அழைக்கலாம் (இரண்டு பேரக்குழந்தைகளுக்கு நான் பாட்டியாகும்).

அன்னு சொன்னது…

இன்றும் இதை செய்யப்போகிறேன் அம்மா. பாட்டியான பின்னும் தங்கு தடையின்றி இப்படி பயனுள்ள, எளிமையான குறிப்புகளை வழ்ங்கி வருவது மிகவும் உற்சாகமளிக்கிறது. வாழ்த்துக்கள். இன்னும் தொடருங்கள். :)

கமலா சொன்னது…

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி அன்னு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...