• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வெள்ளரிக்காய் மோர் கூட்டு


தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
தயிர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெள்ளரிக்காயை, தோல், விதை மற்றும் உள்ளிருக்கும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வெள்ளரிக்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி மிதமானத்தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. காயிலுள்ள் நீர்ச்சத்திலேயே வெந்து விடும். அரை வேக்காடு வெந்தால் போதும். குழைய விடக்கூடாது.

இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து, இலேசாகக் கிளறி விட்டு, ஓரிரு வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து, சற்று கொதித்தவுடன், கீழே இறக்கி வைக்கவும். கூட்டு சற்று ஆறியதும், அதில் தயிரை நன்றாகக் கடைந்துச் சேர்த்துக் கலக்கவும்.

பின்னர் அதில், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு: இந்தக் கூட்டை, சுரைக்காய், வெள்ளைப் பூசணிக்காய் ஆகியவற்றை உபயோகித்தும் செய்யலாம்.

காரமான குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கமலா அவர்களுக்கு வணக்கம்

உங்களுடைய சமையல் குறிப்புகள் அனைத்தும் செய்திருக்கின்றேன். மிக அருமையாக உள்ளது. நான் வெளிநாட்டில் இருப்பதால் சில சரக்கு சாமான்கள் கிடைப்பதில்லை.

உங்களிடம் ஒரு உதவி தேவை. "குழம்பு தூள்" கடையில் வாங்கினால் நன்றாக இருப்பதில்லை. நாமே வீட்டில் செய்வது நல்லதாக தோன்றுகிறது.


குழம்பு தூள் எப்படி செய்ய வேண்டும்? தேவையான பொருட்கள் என்ன என்று சொல்ல முடியுமா?


நன்றி

பெயரில்லா சொன்னது…

தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. (தங்கள் பெயரைக் குறிப்பிட்டிருந்தால், அழைப்பதற்கு உதவியிருக்கும்).

குழம்பு பொடி தயாரிக்கும் விதத்தை, தனிக்குறிப்பாக கொடுத்துள்ளேன். பார்க்கவும்.

பெயரில்லா சொன்னது…

மன்னிக்கவும் பெயர் இல்லாமல் வந்ததற்கு!


நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சாம்பார் பொடி தான் இருக்கிறது. குழம்பு பொடி பற்றி இல்லையே! முடிந்தால் குர்மா பொடி, கொத்தமல்லி பொடி செய்வது பற்றி சொல்ல முடியுமா?


ப்ளீஸ்

பெயரில்லா சொன்னது…

சாம்பார் பொடி என்பது பொதுவாக அழைக்கப்படுவது. குழம்பு, சாம்பார், கூட்டு அனைத்திற்கும் உபயோகப்படுத்தலாம். பொடி ஒன்றுதான். பருப்பு சேர்த்தால் சாம்பார், இல்லையென்றால் குழம்பு. எண்ணையில்லாமல், வெறும் வாணலியில், எல்லாப் பொருட்களையும் வறுத்து, பொடித்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பிற்கும் உபயோகப்படுத்தலாம். பொதுவாக, வீடுகளில் பெரிய அளவில், மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு, எல்லாவற்றிற்கும் அதை உபயோகிப்பார்கள்.

கொத்துமல்லி பொடி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? குருமா பொடி செய்ததில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

கமலா அவர்களுக்கு வணக்கம்



தகவலுக்கு நன்றி.


உங்களிடம் இன்னொரு வேண்டுகோள்.


"முடிந்தவரையில் சமையல் குறிப்புகள் அதிகமாக எழுதுங்கள்"



ப்ளீஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...