• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

முள்ளங்கி உசிலி


தேவையானப்பொருட்கள்:

முள்ளங்கி - 2
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்தமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 முதல் 4 வரை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூண் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

முள்ளங்கியைத் தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறவைத்த கடலைப்பருப்பு, முள்ளங்கித்துண்டுகள், மிளகாய், உப்பு அக்கியவற்றை ஒன்றாகப் போட்டு வடைக்கு அரைப்பது போல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இட்லித் தட்டில் சிறிது எண்ணைத் தடவி அதில் அரைத்த விழுதை ஒவ்வொரு தட்டிலும் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். பின்னர் இறக்கி வைத்து ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். கறிவேப்பிலையும் போட்டு மீண்டும் வதக்கவும். இப்பொழுது உதிர்த்து வைத்துள்ள முள்ளங்கிப் பருப்பைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறி விட்டு பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு: விருப்பமானால் இத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். தேங்காய் வேண்டாமென்றால் அதைத் தவிர்த்து விடலாம்.

3 கருத்துகள்:

A N A N T H E N சொன்னது…

உசிலின்னா என்ன? பார்க்க உப்புமா மாதிரி இருக்கே?

நம்பி செஞ்சு பார்க்கலாமுல்ல?

பெயரில்லா சொன்னது…

ஆனந்தன் அவர்களெ,

தங்கள் வருகைக்கு நன்றி. நம்பி செய்யலாம். உசிலி என்பது புட்டு மாதிரி இருக்கும். சிலர் புட்டு என்றும் சொல்வார்கள். காய்கறிகளோடு ஆவியில் வேகவைத்த பருப்பைச் சேர்த்து பொரியல் மாதிரி செய்வார்கள். முள்ளங்கி வாசனை சிலருக்கு பிடிக்காததால், அதையும் பருப்புடன் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைப்பதால்,முள்ளங்கி வாடைக் குறைந்து சாப்பிட சுவையாகவே இருக்கும்.

கொத்தவரங்காய், பீன்ஸ், கோஸ், காரட், வாழைப்பூ போன்றவற்றிலும் உசிலி கறி செய்யலாம். அது சற்று வேறு விதமாக செய்ய வேண்டும். அதற்கான குறிப்பை தனியாக கொடுத்துள்ளேன். செய்து பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளவும்.

மோர்குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

malarraji சொன்னது…

this nice dish. very tasty

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...