• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பால் அல்வா



தேவையானப்பொருட்கள்:

பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.


ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.


இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.

குறிப்பு: இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். எல்லப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு (மைக்ரோ அவனில் வைக்கக் கூடிய பாத்திரம்) 8 முதல் 10 நிமிடங்கள் வரை அல்ல்லது அல்வா சரியான பதம் வரும் வரை வைத்திருந்து எடுக்கவும். ஆனால் இடை இடையே இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பாத்திரத்தை வெளியே எடுத்து கிளறி விடவும்.

2 கருத்துகள்:

சந்தனமுல்லை சொன்னது…

வாவ்..யம்மி! பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது! :-)

பெயரில்லா சொன்னது…

நன்றி சந்தனமுல்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...