- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
காரமல் பாயசம்
தேவையானப்பொருட்கள்:
பால் - 4 கப்
சர்க்கரை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு அல்லது ரவா - 2 டீஸ்பூன்
செய்முறை:
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விடவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில்,2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தூவி, மிதமான தீயில் வைக்கவும். கிளறத் தேவையில்லை. சில விநாடிகளில் சர்க்கரை உருகி, பிரவுன் கலருக்கு நிறம் மாறத் தொடங்கும். இப்பொழுது 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் இதில், காய்ச்சி ஆறிய பாலை நிதானமாகச் சேர்த்து, மீண்டும் கொதிக்க விடவும். அரிசிமாவு அல்லது ரவாவை சிறிது நீரில் கரைத்து, கொதிக்கும் பாலில் சேர்த்து, மீதமிருக்கும் சர்க்கரையயும் போட்டுக் கிளறி விடவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, பாயசத்துடன் கலந்து, இறக்கி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சூப்பர்...........!!!!!!!!
வருகைக்கு மிக்க நன்றி செந்தழல் ரவி அவர்களே.
கருத்துரையிடுக