• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கடலைப்பருப்பு சுண்டல்


தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கடலைப்பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் தேவையான தண்ணீரையும், உப்பையும் சேர்த்து ஓரிரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். பருப்பு நன்றாக வேக வேண்டும். ஆனால் குழைந்து விடக்கூடாது. திறந்த பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம். வெந்த பருப்பிலிருந்து நீரை ஒட்ட வடித்து விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் அதில் பெருங்காயத்தூள், மிளகாய் (சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, அத்துடன் வேகவைத்தப் பருப்பையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.

குறிப்பு: பயத்தம் பருப்பு மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றிலும் மேற்கண்ட முறைப்படி சுண்டல் செய்யலாம்.

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

கமலா,
கடலைப்பருப்பு சுண்டல் சுவையோ சுவை.

கமலா சொன்னது…

வாருங்கள் கோமதி அரசு அவர்களே. சுடச்சுட பின்னூட்டமிட்டது, சுண்டலை விட சுவையாயிருந்தது. மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...