- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
காராமணி இனிப்பு சுண்டல்
தேவையானப் பொருட்கள்:
காராமணி பயறு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் = ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
தேன் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குழையவிடக்கூடாது. சுண்டலுக்கு வேக வைப்பதுபோல் வேகவைத்து, தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். பின்னர் அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து காராமணியும் வெல்லமும் ஒன்றாகச் சேரும் வரை கிளறி ஆற விடவும்.
ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
கமலா இதில் நான் காரம் சுண்டல் + சர்க்கரை தேங்காய் சேர்த்து தான் செய்து உள்ளேன் , வெல்லம் தேன் இந்த சுண்டலில் செய்ததில்லை.
நோன்புக்கு தினம் ஒரு விதமான இனிப்பு, மற்றும் கார சுண்டல் எப்படியும் உண்டு, இதையும் செய்து பார்த்து விடவேண்டியது தான்.
வாருங்கள் ஜலீலா அவர்களே. இந்த சுண்டலுடன் பழத்துண்டுகளைச் சேர்த்தும் செய்யலாம். குறிப்பிற்கு இந்த லின்கில் பார்க்கவும்.
http://adupankarai.kamalascorner.com/2008/02/blog-post_10.html
அன்புடன் கமலா
கமலா நேற்று இந்த முறையில் நோன்பு திறக்கும் போது செய்து சாப்பிட்டோம் நல்ல இருந்தது,
நன்றி ஜலீலா. சுண்டல் தங்களுக்கு பிடித்தது குறித்து மிக்க மகிழ்சி.
கருத்துரையிடுக