• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கொத்துமல்லித் தொக்கு



தேவையானப்பொருட்கள்:

கொத்துமல்லி - ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லியை தண்ணீரில் நன்றாக அலசி, ஒரு சுத்தமான துணியில் (அல்லது காகிதத்தில்) பரப்பி, ஈரம் போக நிழலில் உலர்த்தவும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் புளியைச் சேர்த்து வதக்கவும். புளி சற்று வறுபட்டதும் மிளகாயைப் போட்டு சற்று வறுக்கவும். கடைசியில் அத்துடன் நறுக்கியக் கொத்துமல்லியைச் சேர்த்து சுருள வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல், சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

இட்லி/தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். சூடான சாதத்துடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

இந்தத் தொக்கு, குளிர்பதனப்பெட்டியில் வைத்தால் 2 அல்லது 3 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். வெளியில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாது.

4 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

செய்திடுவோம்.மிக்க‌ ந‌ன்றி.

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே.

Vijiskitchencreations சொன்னது…

நல்ல ரெசிப்பி. வாய்க்கு ருசியான பசியை தூண்டும் தொக்கு.
கமலா புதினா தொக்கு ரெசிப்பி கூட் இதே போல் தான் நான் செய்வதுண்டு.நன்றி. நல்ல ரெசிப்பிஸ்.

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...