• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

புதினா வடை


தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும்.

எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

4 கருத்துகள்:

Menaga Sathia சொன்னது…

மிக அருமையான வடை!!

கமலா சொன்னது…

மிக்க நன்றி Mrs.Menagasathia அவர்களே.

Jaleela Kamal சொன்னது…

கமலா எப்படி இருக்கீஙகள்
எங்கே என் பக்க ஆளையே காணும்.

புதினா வடை பாக்கவே கிரிஸ்பியா இருக்கும்.

நானும் பகோடா, மசால் வடைக்கு புதினாசேர்த்து செய்வதுண்டு,

ஆனால் உளுந்து வடைக்கு கொத்துமல்லி கீரை தான் சேர்த்து இருக்கேன்,
புதினா சேர்த்துள்ளது நல்ல மணமாக இருக்குமே.

இன்று காலைதான் வடை கொத்து மல்லி சேர்த்து செய்தேன் , அடுத்த முறை புதினா சேர்த்து செய்து விடவேண்டியது தான்

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி ஜலீலா அவர்களே. உளுததம் பருப்பை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து மிளகு, சீரகம் சேர்த்து செய்தால், தனி மணத்துடன் இருக்கும். அதில் புதினாவையும் சேர்க்கும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும். அது மட்டுமன்றி, மிளகு, சீரகம் சேர்ப்பதால், எளிதில் சீரணமும் ஆகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...