- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
ரவா இட்லி
தேவையானப்பொருட்கள்:
ரவா - 2 கப்
தயிர் - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
"ஈனோ" ஃபுரூட் சால்ட் - 3/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).
வறுத்த ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு, 12 முதல் 15 இட்லி வரை கிடைக்கும்.
குறிப்பு: மேற்கூறியுள்ளபடி, தாளித்து அதில் ரவாவைப் போட்டு வறுத்து, ஆற விட்டு எடுத்து வைத்துக் கொண்டால், 2/3 வாரங்களுக்கு மேல் கெடாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது, தயிரையும், ஃபூரூட் சால்ட்டையும் சேர்த்து உடனடியாக இட்லி சுடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
ரவா இட்லி செய்ய மிக எளிதாக இருக்கு
நன்றி கமலா அக்கா
நன்றி புதுவை சிவா அவர்களே.
ஈனோஃப்ரூட்சால்ட் அப்படினா என்ன மேடம்
Hi kamala am in US.since the climate is very cold idly mavu pulika matidu. Nan ovena heat panni anda heatla mava vachalum ponga matidu. plz plz give any idea..
Hi Hema,
அரிசி, உளுந்தை குறைந்தது 7 மணி நேரம் ஊற விடவும். காலை 9 மணிக்குள் ஊற வைத்தால், மாலை 4 அல்லது 5 மணிக்கு அரைத்தெடுக்கலாம். மாவில் உப்பு போட்டு கரைக்கும் பொழுதே, மாவை கெட்டியாக கரைக்காமல், தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பாத்திரத்தை மூடி விடவும். அவனின் லைட்டை (அவனை சூடாக்க வேண்டாம். சூடு படுத்தி மாவை வைத்தால், மாவு வெந்து போய், புளிக்காது) எரிய விட்டு, இட்லி மாவு பாத்திரத்தை உள்ளே வைக்கவும். இரவு முழுவதும் அவனின் லைட்டை எரியவிடவும். காலை 6 மணிக்கு மேல் எடுத்தால் நிச்சயம் புளித்திருக்கும். மாவு பொங்கி வழியும் என்று எதிர் பார்க்க முடியாது. ஆனாலும் இட்லி சுடும் அளவிற்குப் புளித்திருக்கும். 3 கப் இட்லி அரிசி, 1 கப் பச்சை அரிசி மற்றும் 1 கப் முழு உளுத்தம் பருப்பும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் உபயோகித்தால் மிருதுவான் இட்லி கிடைக்கும். கிரைண்டரில் அரைத்தால்தான் உளுந்து புசுபுசுவென்று அரைபடும்.
செய்து பார்த்து விட்டு சொல்லவும்.
Thanks for ur reply.. i will try and reply u madam..
eno fruit salt endral enna madam?
"Eno" is a brand name. Fruit salt is a combination of Sodium Bicarbonate and Citric Acid. Popularly used in India as an antacid. It is available in all medical stores.
Thank you Kamala Mami. Simple yet very tasty. I will again do it this week-end. This time, I'll attempt little variation.
கருத்துரையிடுக