- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
மைசூர் ரசம்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 அல்லது 2
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கொத்துமல்லி இலை - சிறிது
வறுத்தரைக்க:
தனியா - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தாளிக்க:
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி, தேவையான தண்ணீரும், சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து குழைய வேக வைத்து, நன்றாக மசித்து விட்டு அதில் மேலும் சிறிது வென்னீரைச் சேர்த்து, நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும், தனித்தனியாக, ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, ஆறவிட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சற்று கொரகொரப்ப்பாக அரைத்தெடுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் புளித்தண்ணீர், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி நன்றாக வெந்து, புளியின் பச்சை வாசனையும் போனவுடன், அரைத்து வைத்துள்ள விழுதினை சிறிது நீருடன் கலந்து ஊற்றவும். உப்பு சரி பார்த்து, கொத்து மல்லி இலையைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
பின்னர் அத்துடன் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை, நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
நல்ல ரசம். படிக்கும்போதே வாயில் நீர் ஊறுகிறது.
மைசூர் ரசம் நல்லாயிருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க கமலா.
கமலா எப்படி இருக்கீங்க,
புது டெம்லேட் அருமை.
மைசூர் ரசமும் கம கமக்குது. நானும் அடிக்கடி செய்வேன்
மிக்க நன்றி ஜலீலா அவர்களே.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து, டாக்டர் கந்தசுவாமி, தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
hello kamala mam
i love all ur recipes and this rasam is good. this is my first comment.
i have subscribed to your blog and it's very useful for me. can u put baby foods also????
my granny name is also kamala and she is also expert in cooking
regards
Niranjana
Hi Niranjana,
Thank you for visiting my blog and subscribing to it.
கருத்துரையிடுக