- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
கதம்ப சட்னி
கதம்ப சட்னி, வெவ்வேறு பொருட்களை, அவரவர் விருப்பம் போல் சேர்த்து செய்வதாகும், அடிப்படை பொருட்களான, உப்பு, புளி, மிளகாயுடன் தக்காளி, வெங்காயம், தேங்காய், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து செய்யலாம். அந்த வகையில் இதுவும் ஒரு கதம்ப சட்னி.
தேவையானப்பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டு கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 3 முதல் 4 வரை
பூண்டுபற்கள் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
புளி - ஒரு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
மேலே கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, தாளித்து கொட்டவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
இவ்வளவு சிம்பிளா .... எல்லாத்தையும் போட்டு ஒரு கலக்கு மிக்சியில் .... கதம்ப சட்னி அல்லது பேச்சுலர் சட்னி ! நன்றி சகோ !
திண்டுக்கல் தனபாலன் -
தொடர்ந்து தாங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. இது சிம்பிள் சட்னி மட்டுமல்ல, சுவையானதும் கூட.
திண்டுக்கல் தனபாலன் -
தொடர்ந்து தாங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. இது சிம்பிள் சட்னி மட்டுமல்ல, சுவையானதும் கூட.
கருத்துரையிடுக