தேவையானப்பொருட்கள்:
கோதுமை ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை அல்லது 2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில், கோதுமை ரவா, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
வறுத்த ரவா, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை திறந்து, வெந்த ரவா மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
2 கருத்துகள்:
வாவ்...! அருமையாக வந்திருக்கு...!
கல்கண்டு பொங்கலை பார்க்கும் பொழுது நல்ல இனிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
கருத்துரையிடுக