• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இஞ்சி புளி


"இஞ்சி புளி" அல்லது "புளி இஞ்சி" என்றழைக்கப்படும் இது கேரள சிறப்பு ஊறுகாய். சாதரணமாக, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி, வெல்லம் ஆகியவற்றுடன், தேங்காய் எண்ணை சேர்த்து இதை செய்வார்கள், நான் இதில் பச்சை மிளகாயை தவிர்த்து விட்டு, தேங்காய் எண்ணைக்கு பதிலாக நல்லெண்ணை சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி - 3 அல்லது 4 அங்குல அளவு துண்டு - 1
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  நறுக்கிய இஞ்சி 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளியை ஊற வைத்து, கரைத்து, ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  பின்னர் அதில் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும்.   புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லத்தைச் சேர்த்து கெட்டி குழம்பு போல் ஆகும் வரை கொதிக்க விட்டு, கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். 

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

'தக தக' வென...! செய்து பார்க்கிறோம்... நன்றி...

கதம்ப உணர்வுகள் சொன்னது…

சுவை கூட்டும் படமும் ரெசிப்பியும். நன்றி..

உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

http://blogintamil.blogspot.com/2014/12/blog-post_61.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_61.html

Jaleela Kamal சொன்னது…

மிக அருமை கமலா , செய்து பார்க்கிறேன்

ரேணுகா சொன்னது…

மிக அருமை மேடம் நன்றி .

ரேணுகா சொன்னது…

அருமை மேடம் நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...