• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சீனிப்புட்டு


தேவையானப்பொருட்கள்:

புட்டு மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
சீனி - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் புட்டுப் பொடியைப் போட்டு உப்பு சேர்த்து கலக்கவும். அதில் சிறிதளவு வெதுவெதுப்பான நீரைத் தெளித்து கிளறவும். கையில் எடுத்துப் பிடித்தால் பிடிபட வேண்டும். உதிர்த்து விட்டால் பொலபொல என்று உதிர வேண்டும்.

மேற்படி மாவை தயார் செய்து அதில் சீனி, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இட்லித்தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவை நிரப்பி சற்று அழுத்தி ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

புட்டுப்பொடி இல்லாவிட்டால், சாதரண அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு சற்று வறுத்து ஆறவிட்டு அதிலும் இந்தப்புட்டை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...