• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பறங்கிக்காய் கூட்டு


தேவையானப்பொருட்கள்:

பறங்கிக்காய் - 1 துண்டு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பறங்கிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.

இதற்கிடையில், தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, வெந்தக் காயில் கொட்டிக் கிளறி விடவும். ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.




2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உடம்பிற்கு பயனுள்ள கூட்டு... மிக்க நன்றி சகோதரி !

Vetirmagal சொன்னது…

ஒரு வித்யாசமான கூட்டு, பருப்பு சேர்க்காமல். கட்டாயம் செய்ய வேண்டும்!

என் பதிவுக்குத் வந்து உங்கள் மேலான கருத்துகளை எழுதினால் பயனடைவேன்!
http://vetrimagal.blogspot.in/

நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...