• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அரிசி சுண்டல்



தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - ஒன்றரை கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:


வெறும் வாணலியில் அரிசியையும், பருப்பையும் தனித்தனியாகப் போட்டு (மேற்கண்ட படத்தில் உள்ளபடி) சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாகக் கிள்ளிக் கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரை அடுப்பிலேற்றி, அதில் எண்ணையை விடவும். எண்ணை சூடானதும், அதில் கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும். பின் அத்துடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கவும். அதன்பின், வறுத்து வைத்துள்ள அரிசி, பருப்பு இரண்டையும் போட்டு கிளறி விடவும். அத்துடன் 4 கப் தண்ணீரையும், உப்பையும் சேர்த்து கலக்கி, மூடி போட்டு, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கரை இறக்கி வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால், ஊறுகாய் அல்லது வெங்காயத்துவையலைச் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: இதை புழுங்கலரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றிலும் செய்யலாம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

amma

kozhukattai achhu enke kidaikkumunu konjam sollungalen.

srilatha

பெயரில்லா சொன்னது…

தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று சொல்லவில்லை. இந்தியாவில் இந்த அச்சு கிடைக்கும். குறிப்பாக சென்னையில் உள்ள் எல்லா பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும்

பெயரில்லா சொன்னது…

அம்மா

நான் சென்னையில் தான் உள்ளேன். ஆனால் எந்த பாத்திரக் கடையிலும் இந்த மாதிரி அச்சு பார்கவில்லை. குறிப்பாக எந்தக் கடை என்று சொல்ல முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஸ்ரீலதா

பெயரில்லா சொன்னது…

ஸ்ரீலதா,

ரத்னா ஸ்டோர், (புரசைவாக்கம், தி.நகர்) எதிராஜுலு போன்ற பாத்திர கடைகளில் கிடைக்கிறது. வெவ்வேறு டிசைன்களிலும் கிடைக்கிறது. நான் அமைந்தகரையிலுள்ள "அமரா ஸ்டோரில்" வாங்கினேன். அமைந்தகரையிலுள்ள அனைத்து பாத்திரக்கடைகளிலும் (கிட்டதட்ட 7 கடைகள்) கிடைக்கும்.

அது சரி, இதை ஏன் "அரிசி சுண்டலில்" கேட்டிருக்கிரீர்கள்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...