• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

புதினா உருளைக்கிழங்கு கறி


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
புதினா - ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 2
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி யை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாகக் குழைந்து சேர்ந்தபின் அதில் புதினா இலைகளைப் போட்டு சற்று வதக்கவும். அத்துடன் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து உருளைக் கிழங்கு நன்றாக சிவக்கும் வரை அவ்வப்பொழுது கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

11 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான சுவையில் வரும் என வாசிக்கும் போதே தெரிகிறது. நன்றிங்க.

பாண்டித்துரை சொன்னது…

தம்பி உடையான படைக்கு அஞ்சான்

டிசம்பர் 1 முதல் அவன் வேறு நிறுவன பணிக்கு சென்று விட்டான்

ம் நாக்கு இப்ப செத்து போச்சு

ஆமா நம்ம சமையல நாமளே சாப்பிட்ட

உங்க வலைதளம் கொஞ்சம் உதவும்போல தெரிகிறது

அது சரி
இதை எல்லாம் நீங்க சமச்சு சரி பார்த்திங்களா?

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

நன்றி. புதினா உருளை combination அற்புதமாய் இருக்கும். நான் தக்காளி பூண்டு வெங்காயம் சேர்த்து செய்ததில்லை.

புதிய தகவல். நன்றி.

உங்களின் இன்னொரு பதிவில் முடக்கத்தான் கீரை பற்றி கூறியிருந்தீர்கள். nervous disorders க்கு பயன்பெறும் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு மிகவும் உபயோகமான ஆலோசனை. நன்றி.

கூகிளில் தேடோ தேடென்று தேடியும் முடக்கத்தான் கீரைக்கு ஆங்கிலச் சொல் கிடைக்கவில்லை.

முடக்கத்தான் கீரைக்கு ஆங்கிலச் சொல்லோ அல்லது கன்னடச் சொல்லோ தெரிந்தால் கூறவும்.

மிக்க நன்றி. தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

ராமலக்ஷ்மி, பாண்டித்துரை

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பாண்டித்துரை அவர்களே. தயங்காமல் சமைத்துப் பாருங்கள். குறிப்புகள் அனைத்தும் என் அடுப்பங்கரையில் நான் சமைத்து, சாப்பிட்டுப் பார்த்தவைதான். புகைப்படங்களும் சாப்பிடும் முன் நானே எடுத்தவைதான்.

பெயரில்லா சொன்னது…

நன்றிங்க..நானும் சமைச்சு பார்க்க போறேன் :-P

பெயரில்லா சொன்னது…

Shakthiprabha, இனியவள் புனிதா

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Shakthiprabha அவர்களே, முடக்கத்தான் கீரை "பலூன் வைன்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

கன்னடத்தில் agniballi, bekkinatoddinaballi, erumballi, kakaralata என்று அழைக்கப்படுகிறது.


முடக்கத்தான் கீரை குறித்து ஆங்கிலத்திலும் குறிப்பு எழுதியுள்ளேன். கீழ்கண்ட லிங்கில் பார்க்கவும்

http://www.kamalascorner.com/2008/03/mutakathan-keerai.html

ராமலக்ஷ்மி சொன்னது…

//புகைப்படங்களும் சாப்பிடும் முன் நானே எடுத்தவைதான்.//

ஆமாங்க, உங்க ஃபிளிக்கர் தளம் சென்று பார்த்தேன். ஒட்டு மொத்தமா எல்லா படமும் சேர்த்துப் பார்த்தால்..ஹைய்யோ பசிக்க ஆரம்பித்து விட்டது:).

முடக்கத்தானின் கன்னட பெயர்களுக்கு நன்றி. நான் இருப்பதும் பெங்களூர். தமிழ் பெயரில் சொல்லிக் கேட்டால் அவர்களுக்குப் புரிவதில்லை. எனக்கோ சரி பார்த்து வாங்கத் தெரியவில்லை. அரைக்கீரைக்கு கன்னடத்தில் என்னன்னும் தெரிந்தா சொல்லுங்க.

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

///முடக்கத்தான் கீரை "பலூன் வைன்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

கன்னடத்தில் agniballi, bekkinatoddinaballi, erumballi, kakaralata என்று அழைக்கப்படுகிறது.//

நன்றி. மிக்க நன்றி. உங்கள் ஆங்கில பதிவையும் பார்த்தேன். நன்றி.

பெயரில்லா சொன்னது…

ராமலக்ஷ்மி,

அரைக்கீரைக்கு கன்னடத்தில் Harive என்று பெயர். ஆனால் இந்த அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை எல்லவற்றையும் ஆங்கிலத்தில் ஒரே பெயரில்தான் அழைகிறார்கள். நாம் தான் பார்த்து வாங்க வேண்டும். இந்த மூன்று கீரையுமே கிட்டதட்ட ஒரே சுவையில் தான் இருக்கும். சத்துகளும் ஒன்றாகவே உள்ளன. கீரையின் புகைப்படங்களை இந்த தளத்திலேயே கொடுத்துள்ளேன். பார்க்கவும். நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

விரிவான விளக்கத்துக்கு நன்றி. கீரை படங்களைக் கண்டேன். A to Z எல்லாவற்றையும் அருமையாக விளக்கும் தளம் தங்களுடையது. மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

பெயரில்லா சொன்னது…

நன்றி கமலா அவர்களே, உங்கள் பதிவை பார்த்த பின்பு தான் கொஞ்சம் நிம்மதி வந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...