- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
உருளைக்கிழங்கு அல்வா
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
சர்க்கரை - 1 அல்லது ஒன்றரை கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பாதாம் எஸ்ஸென்ஸ் - ஓரிரு துளிகள்
மஞ்சள் அல்லது கேசரி கலர் - ஓரிரு துளிகள்
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
உருளைக்கிழங்கில் அல்வாவா?? வாயுத்தொல்லை இருக்காதே??
உழவன் அவர்களே, வருகைக்கு நன்றி.
உருளைக்கிழங்கில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. உடல் பலம், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இந்த கிழங்கு உதவும். ஆனால் அதை சமைக்கும் பொழுது நாம் ருசிக்காக அத்துடன் நிறைய காரம், எண்ணை ஆகியவற்றைச் சேர்த்து, அதை கெடுத்து விடுகிறோம். இந்த வாயு தொல்லை என்பதும் அப்படித்தான். வாழைக்காய், உருளை, மொச்சை ஆகிய சத்து நிறைந்த உணவுப் பொருட்களை, வாயு என்று ஒதுக்கி விடுகிறோம். இதை சமைக்கும் பொழுது அத்துடன் பூண்டு, சீரகம், ஓமம் போன்றவற்றைச் சேர்த்து சமைத்தால் தொல்லை எதுவும் இருக்காது.
அல்வாவில் நெய் சேர்ப்பதால், கொழுப்பு சத்து கூடுமே தவிர, வாயு தொல்லை ஒன்றும் அதிகமாக வராது. மேலும் அல்வாவை ஓரிரண்டு ஸ்பூன் தான் சாப்பிடுவோம். அதனால் நிச்சயமாக தீங்கு எதுவுமில்லை.
உருளைக் கிழங்கு அல்வா செய்முறை வெகு அருமை.
கருத்துரையிடுக