- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
முள்ளு முறுக்கு
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெண்ணை அல்லது நெய் - 4 டேபிள்ஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாக சலித்தெடுத்து, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும். வெண்ணை அல்லது நெய்யை உருக்கி மாவின் மேல் ஊற்றி, மீண்டும் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். இந்த மாவை, 3 அல்லது 4 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதி மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். முறுக்கு குழலில் "ஒற்றை நட்சத்திர" அச்சைப்போட்டு, பிசைந்த மாவிலிருந்து சிறிது மாவை எடுத்து குழலில் நிரப்பி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் வட்டமாக பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பிசைந்த மாவு தீர்ந்தவுடன், மற்றொரு பகுதி மாவை எடுத்து பிசைந்து, முறுக்கு பிழியவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
அருமையான முருக்கு.பார்க்கவே உடன் செய்து சாப்பிடத்தோன்றுகின்றது.
மிக்க நன்றி ஸாதிகா.
ஸாதிகா சொன்னது போல், முள்ளு முறுக்கு பார்த்ததும், எடுத்து ஒரு வெட்டு வெட்ட்ணும் போல இருக்கு கமலா மேடம்...
எனக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களில் முள்ளு முறுக்கும் ஒன்று...
it good to have such a recipie in tamil language.thanks kamala.
கருத்துரையிடுக