- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
ஓட்டரிசி இட்லி
தேவையானப்பொருட்கள்:
புழுங்கலரிசி (இட்லி அரிசி) - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1/2 கப்
அவல் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியையும், உளுத்தம் பருப்பையும் 5 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெந்தயத்தையும் உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற விடவும்.
அரைப்பதற்கு 1/2 மணி அல்லது 1 மணி நேரத்திற்கு முன்பாக, ஓட்ஸையும், அவலையும் ஒன்றாக ஊற விடவும்.
முதலில் உளுத்தம் பருப்பை ந்ன்றாகக் கழுவி, நீரை வடித்து விட்டு, மிருதுவாக அரைத்தெடுக்கவும். அடுத்து அரிசி, ஓட்ஸ், அவல் ஆகியவற்றை
ஒன்றாகக் கலந்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுகளை ஒன்றாகக் கலந்து, உப்பு போட்டு நன்றாகக் கரைத்து, இரவு முழுவதும் (அல்லது குறைந்தது 8 மணி நேரம்) புளிக்க விடவும்.
மறு நாள், சாதரண இட்லி சுடுவது போல், இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
கவனிக்க: மேற்கண்ட அளவில் அரிசி உபயோகிக்கும் பொழுது, மிக்ஸியிலேயே அரைத்தெடுக்கலாம். அதற்கு மேல் அதிக அளவில் அரிசி ஊற வைத்தால், கிரைண்டரில் அரைப்பது நல்லது.
சாம்பார் / சட்னியுடன் பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
கமலா மேடம்...
புது ரெசிப்பி வந்தது... தேங்க்ஸ்...
அவல், ஓட்ஸ் எல்லாம் போட்டு இட்லி பண்ணலாம்னு இப்போ தான் தெரியறது.
ஓட்ஸ் சேர்த்தால், அந்த வெண்மை நிறம் போய் விடும் அல்லவா?
எனிவே... நல்லா சாஃப்டா இருந்தா, ஒரு வெட்டு வெட்டலாம்...
வருகைக்கு மிக்க நன்றி.
ஓட்ஸ் சேர்ப்பதால் வெண்மை நிறம் மாறி விடாது. மேலே படத்திலுள்ள இட்லி, ஓட்ஸ் சேர்த்து செய்தபின் எடுத்ததுதான். அவல் சேர்ப்பதால் இட்லி மிருதுவாகவே இருக்கும்.
அவசரத்துல நான் அடல்ஸ்ஒன்லி.. னு படிச்சிட்டேன்.. தயை கூடர்ந்து நல்லதொரு தமிழ்பெயர் வைக்கவும். அது உங்களால் முடியும்.
ராஜா அவர்களே.
வருகைக்கு மிக்க நன்றி.
ஓட்ஸை தமிழில் "ஓட்டரிசி" என்றும் கூறலாம். பெயரை மாற்றி விட்டேன்.
கருத்துரையிடுக