• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தமிழ் வருடப் பிறப்பு - 13 ஏப்ரல் 2012


மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்,  இந்த வருடம் சித்திரை முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த ஆண்டின் பெயர் "நந்தன".

தமிழ் புத்தாண்டு அன்று, மிக முக்கியமாக சமையலில் எல்லா விதமான சுவைகளும் சேர்க்கப்படும். நம் வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்று அனைத்தும் கலந்த கலவைதான் என்பதை நமக்கு உணர்த்துவதுடன், அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

வெல்லம் (இனிப்பு), மாங்காய் (புளிப்பு), வேப்பம்பூ (கச‌ப்பு), மிளகாய் (காரம்) சேர்த்து பச்சடி செய்வது வழக்கம்.

சில‌ர், மாங்காய் ப‌ச்ச‌டியும், வேப்ப‌ம்பூ ர‌ச‌மும் செய்வார்க‌ள். அத்துடன், வடை, பாயசம், இனிப்பு போளி மற்றும் மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை மூன்றும் கலந்த சாம்பார் ஆகியவை புத்தாண்டு சமையலில் இடம் பெறும்.

சுவையாகச் சமைத்துப் படைத்து, பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

பழப் பாயசம்                                      இனிப்பு போளி     



 



9 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

தமிழ் புத்தாண்டுக்கு விருந்தே படைத்து விட்டீர்கள்.

உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

கமலா சொன்னது…

நன்றி கோமதி அரசு.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இனிய விருந்துக்கு நன்றி..

ADHI VENKAT சொன்னது…

தடபுடலான விருந்துக்கு நன்றிங்க.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

மு.நாட்ராயன் சொன்னது…

தமிழ் புத்தாண்டு இந்த வருடம்தான் ஏப்பிரல் மாதத்தில் அதுவும் சித்திரை மாதத்தில் வருவதுபோல் எழுதி உள்ளீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சித்திரைதான் தமிழ் புத்தாண்டு. ஒருவர் உத்தரவு என்ற பெயரில் ஒரு அரைப்பக்க காகிதத்தில் தை தான் ஆண்டின் முதல் மாதம் என்று எழுதி விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடி ஆகுமா?

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மு.நாட்ராயன் அவர்களே. தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். முதலிலேயே நான் கூறியுள்ளது போல் "மூன்று ஆண்டுகளுக்கு" பின்னர் இந்த ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ள தமிழ் புத்தாண்டு. "சித்திரை திருநாள்" (விடுமுறை பட்டியலில் இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்கள்), "விடுமுறை நாள்" என்ற போர்வையில்தான் கடந்த மூன்றாண்டுகளும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த வருடம் அப்படியில்லாமல், சித்திரை முதல் நாளை "தமிழ் புத்தாண்டு" என்று தைரியமாகக் கொண்டாடலாம். ஆனாலும் இன்னும் சிலர் இதை ஏற்க மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கமலா சொன்னது…

அமைதிச்சாரல், கோவை2தில்லி தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி சகோதரி !

கமலா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் - வருகைக்கு நன்றி. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...