• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அரிசி பாயசம்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்  பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும்.   சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் அதில் வெல்ல நீரை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.  பாயசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.  ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்கயை போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

2 கருத்துகள்:

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்லா இருக்கு...பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வீட்டில் செய்ததில்லை... குறித்துக் கொண்டார்கள்...

நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...