• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சிவப்பு அவல் கொழுக்கட்டை



தேவையானப்பொருட்கள்:

சிவப்பு அவல் - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அவலை கழுவி விட்டு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். தண்ணீர் அவல் மூழ்கும் அளவிற்கு விட்டால் சரியாக இருக்கும். ஊறிய அவலில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.   ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து பிசைந்து வைத்துள்ள அவலில் கொட்டவும்.  தேங்காய்த்துருவலையும் சேர்த்து மீண்டும் நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.   எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து ஓவல் வடிவில் கொழுக்கட்டையாகப் பிடித்து, இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.  

சட்னியுடன் பரிமாறவும்.  இட்லி மிளகாய்ப் பொடியுடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

3 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

அவலில் உப்புமா தான் செய்வேன். கொழுக்கட்டை செய்ததில்லை. இனி செய்கிறேன்.

கோமதி அரசு சொன்னது…

நல்ல அவல் கொழுக்கட்டை பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு சொன்னது…

இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...